சீனாவிலும் வசூலில் சாதனை படைத்தது பாலிவுட் ‘அந்தாதுன்’ திரைப்படம்!

சினிமா
Updated Apr 22, 2019 | 21:02 IST | Zoom

அந்தாதுன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று ’பியானோ ப்ளேயர்’ என்கிற பெயரில் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவில் ரீலீஸ் செய்யப்பட்டது.

cinema, சினிமா
அந்தாதுன் திரைப்படம்  |  Photo Credit: Twitter

பெய்ஜிங்: பாலிவுட்டில் நடிகை தபு மற்றும் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடிகை ராதிகா ஆப்தா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் விறுவிறுப்பான கதைக்களத்தால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் சீனாவிலும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. 

இரண்டு வாரங்களுக்கு முன்பாக சீனாவில் ரீலீஸான இந்த திரைப்படம் ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘சஷாம்’ திரைப்படத்தின் வசூலை பாக்ஸ் ஆபிசில் முந்தியுள்ளது.

அந்தாதுன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று ’பியானோ ப்ளேயர்’ என்கிற பெயரில் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவில் ரீலீஸ் செய்யப்பட்டது.

Andhadhun movie

இத்திரைப்படம் சீனாவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘பிளாக் ஹாமெடி ஹாரர்’ வகையைச் சேர்ந்த திரைப்படம் இது. பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது அந்தாதுன்.

கிட்டதட்ட 43.45 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த திரைப்படம் வசூலித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூபாய் 303.36 கோடியாகும். முன்னதாக, இந்தியாவில் அந்தாதுன் திரைப்படம் ரூபாய் 95.63 கோடியை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
சீனாவிலும் வசூலில் சாதனை படைத்தது பாலிவுட் ‘அந்தாதுன்’ திரைப்படம்! Description: அந்தாதுன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று ’பியானோ ப்ளேயர்’ என்கிற பெயரில் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவில் ரீலீஸ் செய்யப்பட்டது.
Loading...
Loading...
Loading...