நிறைமாத வயிற்றுடன் ரெட்கார்பெட்டில் போஸ் கொடுத்த அம்மா எமி ஜாக்சன் - வீடியோ

சினிமா
Updated May 14, 2019 | 13:52 IST | Zoom

நடிகை எமி ஜாக்சன் நிறைமாத வயிற்றுடன் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்ற புகழ்பெற்ற பாஃப்தா (BAFTA) விருதுகள் விழாவுக்கு சென்றபோது ரெட் கார்பெட்டில் அளித்த போஸ் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Amy Jackson with her baby bump at BAFTA
Amy Jackson with her baby bump at BAFTA  |  Photo Credit: Instagram

நடிகை எமி ஜாக்சன் நிறைமாத கர்ப்பிணியாக லண்டன் விருதுவிழாவில் ரெட்கார்ப்பெட்டில் போஸ் கொடுத்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. 

பிரிட்டீஷ் நடிகையான எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமானவர். அதன் பின் சங்கரின் ஐ, எந்திரன் 2.0 போன்ற பல தமிழ், ஹிந்தி படங்களில் நடித்தவர். தற்போது லண்டனில் வசிக்கும் எமி, லண்டனில் கோடீஸ்வரர் ஜியார்ஜைக் காதலித்து வந்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்தபிறகுதான் திருமணம் என்று அதிரிடியாக அறிவித்த இந்த ஜோடி, இந்த மாதம்தான் நிச்சயதார்த்தம் செய்துகொண்டது.

தனது தாய்மையை நினைத்துப் பூரித்துப்போயிருக்கும் எமி, கருவுற்ற நாளில் இருந்து அவ்வபோது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவட் செய்யும் புகைப்படம் வெளியிட்டு திட்டும் வாங்கிக்கொண்டார். இவர் கர்ப்பமாகி 5 மாதம் முடியப்போகும் நிலையில் செப்டம்பரில் பிறக்கப்போகும் குழந்தைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் தம்பதி இருவரும்.

இந்த ஜோடி, ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்ற புகழ்பெற்ற பாஃப்தா (BAFTA) விருதுகள் விழாவுக்கு சென்றபோது ரெட் கார்பெட்டில் அளித்த போஸ் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் எமி ஜாக்சன் சிவப்பு நிற கௌனில் தனது நிறைமாத வயிற்றுடன் போஸ் கொடுக்கிறார் எமி. அதற்கு அப்பாவும் அம்மாவும் டேட்டிங் நைட்டில் என்று பதிவிட பிரபலங்கள் உட்பட வாவ், க்யூட் என பாராட்டி வருகிறார்கள் இந்தத் தம்பதியை! 

 

 

 

NEXT STORY
நிறைமாத வயிற்றுடன் ரெட்கார்பெட்டில் போஸ் கொடுத்த அம்மா எமி ஜாக்சன் - வீடியோ Description: நடிகை எமி ஜாக்சன் நிறைமாத வயிற்றுடன் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்ற புகழ்பெற்ற பாஃப்தா (BAFTA) விருதுகள் விழாவுக்கு சென்றபோது ரெட் கார்பெட்டில் அளித்த போஸ் தற்போது வைரல் ஆகி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles