பொறக்கும் போது ட்ரஸ்ஸோடயா பொறந்தோம் - அமலா பாலின் ஆடை பட டிரைலர் வெளியீடு!

சினிமா
Updated Jul 06, 2019 | 14:03 IST | Zoom

அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் டிரைலயரை இன்று பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டு இருக்கிறார்.

Aadai Trailer
Aadai Trailer  |  Photo Credit: YouTube

அமலாபால் நடித்த ஆடை படத்தின் டீசரை சமீபத்தில் கரண் ஜோகர் வெளியிட்ட நிலையில் அந்த படத்தின் டிரைலரை இன்று அனுராக் காஷ்யப் வெளியிட்டார். மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்ன குமாரின் அடுத்த படைப்பு தான் இந்த ஆடை  தனது முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்ததால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இந்த படத்தில் நடிகை அமலாபால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமீபகாலமாக ஹீரோக்கள் இல்லாமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரம் வெளியாகி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்தவகையில் அமலாபால் முதன்முதலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆடை இல்லாமல் கிழிந்த துணியுடனும் ரத்தம் படிந்த உடலுடனும் அமலாபால் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு பக்கம் ஆதரவையும் ஒரு பக்கம் எதிர்ப்பையும் பெற்றது. இந்தப் படம் ஏ சர்டிபிகேட் வாங்கி இருக்கிறது.

அதனை தொடர்ந்து  வெளியான டீஸரும் ஹிட் அடித்தது. டீசருக்குப் பின் படம் பற்றிய பேச்சும் அதிகரித்தது. இந்த டீசரை பார்த்து தான் விஜய் சேதுபதி படத்தில் தயாரிப்பாளர் தன்னை நீக்கி விட்டார் என்று அமலாபால் நீண்ட அறிக்கையையும் விட்டிருந்தார். இந்நிலையில் இன்று பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த டிரெய்லரை வெளியிட்டு இருக்கிறார். இதுபற்றி கூறியிருக்கும் அனுராக் இந்தட் ட்ரெய்லரை பார்த்தபின் மிகவும் ஆர்வத்துடன் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன், இந்த டிரைலரை வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 19ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.  டிரெய்லரில் பல விதமான கதாபாத்திரங்களில் அமலாபால் வருவதால் என்ன கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் காமினி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பால், பெட் கட்டுவதில் ஆர்வமுள்ளப் பெண்ணாக இருக்கிறார். இதனால் ஏற்படுக் விளைவுளே படத்தின் கதையாக இருக்கக்கூடும் என்று டிரைலரைப் பார்க்கும்போது புரிகிறது.  படத்தின் டிரைலர் இங்கே...

NEXT STORY
பொறக்கும் போது ட்ரஸ்ஸோடயா பொறந்தோம் - அமலா பாலின் ஆடை பட டிரைலர் வெளியீடு! Description: அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் டிரைலயரை இன்று பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டு இருக்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles