’மறைக்க ஒன்றும் இல்லை’ - அமலாபாலின் ‘ஆடை’ டீசர் வெளியானது!

சினிமா
Updated Jun 18, 2019 | 16:23 IST | Zoom

நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களும் இந்த பட போஸ்டருக்கு எழுந்த நிலையில், இன்று டீசர் வெளியாகியிருக்கிறது.

cinema, சினிமா
ஆடை போஸ்டரில் அமலா பால்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகை அமலாபால் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படமான ‘ஆடை’ டீசர் இன்று வெளியாகியுள்ளது.

’மேயாத மான்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபலமானவர் இயக்குனர் ரத்னகுமார். அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ‘ஆடை’. ஜாலியான திரைப்படமாக வெளிவந்து மேயாத மான் வெற்றியடைந்த நிலையில், இந்தமுறை சீரியஸான கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் ரத்னகுமார். 

 

 

தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் அமலா பால், இந்த திரைப்படத்தில் ‘காமினி’ என்கிற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அமலா பால், பாதி கிழிந்த ஆடையுடன், உடலில் ரத்தம் படிந்த நிலையில் காணப்பட்ட தோற்றம் இந்த திரைப்படம் மீதான எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருந்தது.

நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களும் இந்த பட போஸ்டருக்கு எழுந்த நிலையில், இன்று டீசர் வெளியாகியிருக்கிறது. ’மறைக்க ஒன்றும் இல்லை’ என்று இந்த டீசர் அறிவிப்பில் வெளியாகிருந்த வாசகமும் எதிர்ப்பார்ப்பினை கிளப்பியிருந்தது.

 

 

இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோகர் இந்த டீசரை இன்று வெளியிட்டுள்ளார். டீசரின் இறுதியில் அமலாபால் ஆடையில்லாமல் அமர்ந்திருக்கும் போல்டான தோற்றமும் டீசருக்கு வலு சேர்த்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

விஜய் கார்த்திக் கண்ணன் இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். வி ஸ்டூடியோஸ் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. 

NEXT STORY
’மறைக்க ஒன்றும் இல்லை’ - அமலாபாலின் ‘ஆடை’ டீசர் வெளியானது! Description: நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களும் இந்த பட போஸ்டருக்கு எழுந்த நிலையில், இன்று டீசர் வெளியாகியிருக்கிறது.
Loading...
Loading...
Loading...