வெளியானது நேர்கொண்ட பார்வையின் காலம் பாடல்!

சினிமா
Updated Jul 09, 2019 | 19:20 IST | Zoom

நேர்கொண்ட பார்வையின் இரண்டாவது பாடலான காலம் பாடலை மாரி படத்தில் டானு டானு பாடல் பாடிய அலிஷா தாமஸ் பாடியிருக்கிறார்.

Kaalam lyrical video is out now
Kaalam lyrical video is out now  |  Photo Credit: YouTube

அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் இரண்டாவது பாடலான காலம் பாடல் சற்று முன் வெளியானது. 

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்தப்படம் பிங்க். இதில் பாலியல் சீண்டலுக்கு ஆளான மூன்று பெண்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அந்த கதாப்பாத்திரத்தில் தல அஜித் நடித்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படம் நேர்கொண்ட பார்வை. இந்தப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கனேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று இயக்குநர் ஹச்.வினோத் இயக்குகிறார். 

வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற மார்ச் மாதம் ரிலீஸானது. படத்தின் ட்ரைலர் இந்த மாதம் 12-ஆம் தேதி ரிலீஸானது. படத்தின் அறிவிப்புகள் எந்தவிதமான முன்னறிவிப்போ, ஆடம்பரமோ இல்லாமல் சர்ப்ரைஸாகத்தான் ரிலீஸாகி வருகிறது. ஜூன் 27ஆம் தேதி காலை இந்தப் படத்தின் முதல் பாடலான வானின் இருள் வெளியான நிலையில் இன்று இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ஆன காலம் வெளியாகி உள்ளது.

 இந்தப்பாடலை நாகார்ஜூன், யொவுன்ஹோ எழுதி உள்ளனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் சிறப்பு தோற்றத்தில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் பாடலில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் பாடல் இ.டி.எம் என்று கூறப்படும் பப்களில் பாடப்படும் பெப்பி நம்பராக வெளியாகி உள்ளது. மாரி படத்தில் டானு டானு பாடல் பாடிய அலிஷா தாமஸ் பாடியிருக்கிறார். யுவனின் பார்ட்டி பாடல்கள் அனைத்துமே ஹிட் நம்பர்தான். ஏதோ ஒரு மயக்கம், ஸ்டைலிஷ் தமிழச்சி, விளையாடு மங்காத்தா பாடல்களில் வரிசையில் இந்தப் பாடலும் துள்ளலிசையோடு இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். பாடலின் லிங்க் இங்கே...

 

NEXT STORY
வெளியானது நேர்கொண்ட பார்வையின் காலம் பாடல்! Description: நேர்கொண்ட பார்வையின் இரண்டாவது பாடலான காலம் பாடலை மாரி படத்தில் டானு டானு பாடல் பாடிய அலிஷா தாமஸ் பாடியிருக்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles