அஜித் ரசிகர்கள் உற்சாகம்.. யுவன் இசையில் மிரட்டும் 'தீ முகம்தான்' லிரிக்கள் வீடியோ

சினிமா
Updated Jul 20, 2019 | 19:28 IST | Zoom

நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள தீ முகம்தான் யார் இவன் தான் பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகியது.

Nerkonda paarvai
Nerkonda paarvai  |  Photo Credit: YouTube

அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தின் ' தீ முகம்தான் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்', 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.  போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித் நடித்துள்ளார். அஜித்தோடு வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். 

தல ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது. யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே இந்தப் படத்தின் இரண்டு பாடல்களின் லிரிக்கல் வீடியோ மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 


இந்நிலையில், தற்போது 'தீ முகம்தான் யார் இவன் தான்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பா.விஜய் எழுதியிருக்கும் இந்தப் பாடலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...