'நேர்கொண்ட பார்வை' படத்தின் அடுத்த பாடலான 'இ.டி.எம் சாங்' இன்று மாலை வெளியீடு

சினிமா
Updated Jul 09, 2019 | 12:39 IST | Zoom

'நேர்கொண்ட பார்வை' படத்தின் 'இ.டி.எம் சாங்' இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகவுள்ளது.

'Nerkonda Paarvai' film's EDM Song
'நேர்கொண்ட பார்வை' படத்தின் 'இ.டி.எம் சாங்'  |  Photo Credit: Twitter

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் 'இ.டி.எம் சாங்' இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகவுள்ளது.

2016-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், டெல்லி கணேஷ், அஸ்வின் ராவ், அதிக் ரவிச்சந்திரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். 'ஆரம்பம்' படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. 

'நேர்கொண்ட பார்வை' படத்தின் முதல் சிங்கிளான  'வானில் இருள்' பாடலின் லிரிக்கல் வீடியோ ஜூன் 27-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான 'இ.டி.எம் சாங்' லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகிறது என்று படத் தயாரிப்பாளரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் சிறப்பு தோற்றத்தில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த 'இ.டி.எம் சாங்' பாடலில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.   

 

 

'நேர்கொண்ட பார்வை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதை தொடர்ந்து பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இறுதியாக அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'விஸ்வாசம்'. 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு அஜித்தின் இரண்டு படங்கள்  தற்போது ஒரே வருடத்தில்  வெளியாக உள்ளது. 

NEXT STORY
'நேர்கொண்ட பார்வை' படத்தின் அடுத்த பாடலான 'இ.டி.எம் சாங்' இன்று மாலை வெளியீடு Description: 'நேர்கொண்ட பார்வை' படத்தின் 'இ.டி.எம் சாங்' இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகவுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola