அஜித்-ஷாலினிக்கு இன்று 19வது திருமண நாள்- கொண்டாடித்தீர்த்த ரசிகர்கள்!

சினிமா
Updated Apr 24, 2019 | 13:02 IST | டைம்ஸ் நவ்

ஒரு எதிர்குரல் கூட எழும்பாமல் எல்லோராலும் மனமார்ந்த வாழ்த்துக்களைப் பெற்ற சினிமா ஜோடி இதுவாகத்தான் இருக்கும்.

ajith shalini anniversary
அஜித் ஷாலினி திருமண நாள்  |  Photo Credit: Twitter

தமிழ் சினிமாவின் க்யூட் ஜோடியான அஜித்- ஷாலினி இன்று தங்களது 19வது திருமண ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றனர். 1999- ஆம் ஆண்டு இருவரும் நடித்த அமர்க்களம் படம்தான் இவர்களது காதலுக்கான விசிட்டிங் கார்டு. 

படப்பிடிப்பில் ஷாலிக்கு லேசானக் காயம் ஏற்பட, அதனைப் பார்த்து பதறிய அஜித் ஷாலினியைப் பார்த்துக்கொண்ட போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. சும்மாவே அஜித் யாருக்கு என்றாலும் ஓடிப்போய் உதவி செய்யும் மனம் கொண்டவர். தனக்குப் பிடித்தப் பெண் என்றால் சும்மா இருப்பாரா?: ஆம். அந்தத் தருணத்தில் அஜித் தன் மீது காதல் கொண்டிருப்பதை ஷாலினியும் உணர்ந்திருக்கிறார். 

பின்னாளின் அஜித்தே தன் காதலை வெளிப்படுத்த மறுகணமே வீட்டில் பேசச் சொல்லி க்ரீன் சிக்னலும் வர, இருவரும் 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 -ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ஒரு எதிர்குரல் கூட எழும்பாமல் எல்லோராலும் மனமார்ந்த வாழ்த்துக்களைப் பெற்ற சினிமா ஜோடி இதுவாகத்தான் இருக்கும்.

அதன்பின் ஷாலினி படங்களில் நடிப்பதில்லை. முழுக்க முழுக்க அஜித் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டார். எட்டு வருடங்கள் கழித்து அனோஷ்காவுக்கு பெற்றோராகினர் இருவரும். தனது மனைவியின் பிரசவத்தை உடன் இருந்து தானும் அறுவை சிகிச்சை அறையில் பார்த்துக்கொண்டார். அவ்வளவு அன்பு அஜிதுக்கு ஷாலினியின் மேல். 2015-இல் குட்டித் தல என்று அனைவராலும் கொஞ்சப்படும் ஆத்விக் பிறந்தார். இன்று அவர்களது திருமண நாளை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். நாமளும் வாழ்த்துவோம்! 

நீடூழி வாழ்க!!!

NEXT STORY
அஜித்-ஷாலினிக்கு இன்று 19வது திருமண நாள்- கொண்டாடித்தீர்த்த ரசிகர்கள்! Description: ஒரு எதிர்குரல் கூட எழும்பாமல் எல்லோராலும் மனமார்ந்த வாழ்த்துக்களைப் பெற்ற சினிமா ஜோடி இதுவாகத்தான் இருக்கும்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles