காஷ்மீர் பிரச்னைக்கு கருத்து தெரிவித்ததால் பெற்றோர், மகளுக்கு மிரட்டல்: மன உளைச்சலில் அனுராக் காஷ்யப்

சினிமா
Updated Aug 11, 2019 | 16:43 IST | Zoom

காஷ்மீர் பிரச்னையில் கருத்து தெரிவித்ததற்காக தனது பெற்றோருக்கும் மகளுக்கும் மிரட்டல் வந்ததால் ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார் அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்  |  Photo Credit: Twitter

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இமைக்கா நொடிகள் மூலம் அனுராக் காஷ்யப்பை தெரிந்திருக்கும். பாலிவுட்டில் முக்கயமான ஒரு வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் அனுராக் காஷ்யப். அதே போல நாட்டுப் பிரச்னைக்கும் குரல் கொடுப்பதில் முதல் ஆளாய் வந்து நிற்பார். காஷ்மீர் பிரச்னையின் போது தனது கருத்தைக் கூறியதால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்போது ட்விட்டரை விட்டு செல்கிறேன் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும் லடாக் பகுதியை தனி மாநிலமாகப் பிரித்தும் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதில் இருந்தும் பலத்த எதிர்ப்பும் ஆதரவும் வந்தன. இது குறித்து விமர்சித்த அனுராக் காஷ்யப் இந்த நாட்டில் தான் செய்வதுதான் சரியென்றும் இங்குள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நல்லது செய்வது போலவும் ஒருவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் இதுபோன்றவற்றை அமல்படுத்த அதிகாரம் இருப்பது மிகவும் பயமாக உள்ளது என்று மறைமுகமாக ஒரு ட்வீட் போட்டிருந்தார். 

Image Image

இதனால் அவர் யாரைக் குறிபிட்டார் என்று தெரிந்து அவரது ஆதரவாளர்கள் ட்விட்டரிலேயே அனுராக்கை விமர்சனம் செய்தனர். இந்நிலையில் நேற்று திடீரென்று தான் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் குறிப்பிட்டிருக்கும் காரணம்தான் பலர் அதிர்ச்சிய அடையச் செய்துள்ளது. இவர் காஷ்மீர் குறித்து விமர்சனம் செய்ததால் அவரது பெற்றோருக்கும் மகளுக்கும் மிரட்டல் வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் குண்டர்கள் நாட்டை ஆண்டால் இப்படிதானே இருக்கும் இதுதான் புதிய இந்தியா என்றால் இந்த புதிய இந்தியாவில் அனைவரும் செழிப்பாக வாழ வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

NEXT STORY
காஷ்மீர் பிரச்னைக்கு கருத்து தெரிவித்ததால் பெற்றோர், மகளுக்கு மிரட்டல்: மன உளைச்சலில் அனுராக் காஷ்யப் Description: காஷ்மீர் பிரச்னையில் கருத்து தெரிவித்ததற்காக தனது பெற்றோருக்கும் மகளுக்கும் மிரட்டல் வந்ததால் ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார் அனுராக் காஷ்யப்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...