திருமணத்திற்கு பிறகு திரையில் இணையும் ஆர்யா - சயீஷா

சினிமா
Updated May 24, 2019 | 23:05 IST | Zoom

தம்பதியான ஆர்யாவும், சயீஷாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

shooting begins Arya's Teddy
shooting begins Arya's Teddy  |  Photo Credit: Twitter

ஆர்யா - சயீஷா சேர்ந்து நடிக்கும் 'டெடி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சயீஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, தேனிலவிற்கு சென்று வந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். 

இந்நிலையில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் டெடி படத்தில் ஆர்யாவும், சயீஷாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சக்தி செளந்தர் ராஜன் இயக்க உள்ளார். இவர் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். டெடி படத்தில் சதீஷ், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

shooting begins Arya's Teddy

டி.இமான் இசையமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. ஆர்யா தற்போது சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளா காப்பான் படத்திலும் நடித்து வருகிறார். 
 

NEXT STORY
திருமணத்திற்கு பிறகு திரையில் இணையும் ஆர்யா - சயீஷா Description: தம்பதியான ஆர்யாவும், சயீஷாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles