11 வருடங்களுக்குப் பிறகு தர்பார் படத்துக்காக சூப்பர்ஸ்டாருடன் இணையும் நயன்தாரா!

சினிமா
Updated Apr 23, 2019 | 09:38 IST | டைம்ஸ் நவ் தமிழ்

தர்பார் படத்தின் நாயகி யாரென்று படக்குழு இதுவரை அறிவிக்காத நிலையில் தற்போது நயன்தாரா சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

rajini nayanthara
ரஜினி, நயன் தாரா  |  Photo Credit: Twitter

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான தர்பாரில் நயன் தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்று அறிவித்திருக்கிறது படக்குழு.

பொங்கலுக்கு ரிலீஸான சூப்பர் ஸ்டாரின் பேட்ட சென்ற வாரம்தான் 100-வது நாள் வெற்றியைக் கொண்டாடியது. அதன் பிறகு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் தர்பார் என பெயர் வைக்கப்பட்டு மும்பையில் சென்ற வாரம் முதல் படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏ.ஆ.முருகதாச் இயக்குகிறார். தர்பாரில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இந்தப்படத்துக்கு  பேட்ட படத்தில் மரணமாஸ் காட்டிய அனிருத் இசையமைக்கிறார். லைக்கா தயாரிக்கும் இந்தப்படத்துக்கு தளபதி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப்படமும் வரும் 2020 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

படத்தின் நாயகி யாரென்று படக்குழு இதுவரை அறிவிக்காத நிலையில் தற்போது நயன்தாரா சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸும் ட்வீட் செய்திருக்கிறார்கள். நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் தளபதி 63-இல் நடித்து வருகிறார். இதுபோக மெகா பட்ஜெட் தெலுங்கு படமான  நரசிம்மா ரெட்டியிலும் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வனில் நடிக்கக் கேட்டதாகவும் கால்சீட் இல்லாததால் நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் திரைத்துறையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை சந்திரமுகி, குசேலனில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகவும் சிவாஜி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சூப்பர்ஸ்டாருடன் நடனம் ஆடியிருக்கும் நயன்தாரா 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைகிறார். ஏ.ஆர்.முருகதாஸ்ஸுடன் கஜினி படத்தில் மட்டுமே நடித்திருக்கும் நயன் தாராவுக்கு இதுதான் முருகதாஸ்ஸுடன் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
11 வருடங்களுக்குப் பிறகு தர்பார் படத்துக்காக சூப்பர்ஸ்டாருடன் இணையும் நயன்தாரா! Description: தர்பார் படத்தின் நாயகி யாரென்று படக்குழு இதுவரை அறிவிக்காத நிலையில் தற்போது நயன்தாரா சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Loading...
Loading...
Loading...