விஜய் தேவரகொண்டாவின் திரைப்படத்தில் நடிகை வாணி போஜன்?!

சினிமா
Updated Apr 15, 2019 | 21:10 IST | Times Now

, விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளராக அறிமுகமாகும் முதல் படத்தில் வாணி போஜனைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரையே ஹீரோயினாக புக் செய்துள்ளனராம் படக்குழுவினர்.

vani bhojan, வாணி போஜன்
நடிகை வாணி போஜன்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முதன்முதலாக தயாரிக்கும் புதிய படத்தில் ‘தெய்வமகள்’ சீரியல் புகழ் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் வாணி போஜன். அதற்கு முன்பாக இவர் மாடலாக இருந்தார். பின்னர் தொடர்ந்து, மாயா, தெய்மகள் ஆகிய சீரியல்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தெய்வமகள் தொடருக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியின் காமெடி ஷோ ஒன்றில் நடுவராக பிசியானார் வாணி. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் வைபவ் நடிக்கும் ‘என்4’ என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் வாணி. இப்படத்தை லோகேஷ் என்பவர் இயக்கி வருகிறார்.

Vani bhojan

இந்நிலையில்தான், விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளராக அறிமுகமாகும் முதல் படத்தில் வாணி போஜனைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரையே ஹீரோயினாக புக் செய்துள்ளனராம் படக்குழுவினர்.

’பெல்லி சொப்புலு’ திரைப்படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். பெல்லி சொப்புலு திரைப்படத்தில் விஜய் தேவரொகொண்டா நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை சென்னையைச் சேர்ந்த ஷார்ட் பிலிம் இயக்குனரான சமீர் என்பவர் இயக்க இருக்கிறார்.

தெலுங்கு பேச தனக்கு சரளமாக வராது என்றாலும், படக்குழுவினரில் பலரும் தமிழில் பேசுவதால் படப்பிடிப்பு எளிதாக இருப்பதாக தெரிவித்துள்ளார் வாணி போஜன். மேலும், தெலுங்கில் பேச வேண்டிய வசனங்களை மனப்பாடம் செய்து ரிகர்சல் செய்து நடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படக்குழுவினரின் சப்போர்ட்டால் அவருக்கு இந்த படத்தில் நடிப்பது எளிதாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வாணி போஜன்.

NEXT STORY
விஜய் தேவரகொண்டாவின் திரைப்படத்தில் நடிகை வாணி போஜன்?! Description: , விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளராக அறிமுகமாகும் முதல் படத்தில் வாணி போஜனைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரையே ஹீரோயினாக புக் செய்துள்ளனராம் படக்குழுவினர்.
Loading...
Loading...
Loading...