நடிகர் ராணாவின் புதிய படத்தில் பேராசிரியை ஆகிறார் நடிகை தபு?!

சினிமா
Updated Apr 19, 2019 | 16:10 IST | Zoom

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இதில் தபு, சமூக ஆர்வலராக, ம்க்களுக்காக போராடும் பேராசிரியர் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

cinema, சினிமா
நடிகை தபு  |  Photo Credit: Twitter

சென்னை: தெலுங்கில் நடிகர் ராணா மற்றும் நடிகை சாய்பல்லவி நடிக்கும் புதிய படமொன்றில் வித்தியாசமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் பிரபல நடிகை தபு.

தமிழில் ஒருகாலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த தபு, இந்தி சினிமா உலகில் பிசியானர். கடைசியாக தமிழில் விக்ரம், ஜீவா நடித்திருந்த ‘டேவிட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது அவர் இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். ஏற்கனவே திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘ஏஏ19’ திரைப்படத்தில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார் தபு.

தற்போது, நடிகர் ராணா மற்றும் சாய்பல்லவி முதன்மை வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் கமிட் ஆகியிருக்கிறார் தபு. வேணு உடுகுலா இயக்கும் இத்திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. 

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இதில் தபு, சமூக ஆர்வலராக, ம்க்களுக்காக போராடும் பேராசிரியர் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். எனினும், முறையாக இன்னும் அவர் இதுகுறித்து தகவல்களை வெளியிடவில்லை. இத்திரைப்படத்தில் நடிகர் ராணா காவல்துறை அதிகாரியாகவும், நடிகை சாய்பல்லவி நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NEXT STORY
நடிகர் ராணாவின் புதிய படத்தில் பேராசிரியை ஆகிறார் நடிகை தபு?! Description: ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இதில் தபு, சமூக ஆர்வலராக, ம்க்களுக்காக போராடும் பேராசிரியர் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
Loading...
Loading...
Loading...