அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிகை ஸ்ருதி ஹாசன்

சினிமா
Updated Jun 20, 2019 | 17:41 IST | Times Now

'டிரேட்ஸ்டோன்' என்கிற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

Actress Shruti Haasan
நடிகை ஸ்ருதி ஹாசன்  |  Photo Credit: Instagram

'7ஆம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'டிரேட்ஸ்டோன்' என்கிற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார்.'பெர்ன்' என்கிற பிரபல ஹாலிவுட் திரைப்படத்தை தழுவி எடுக்கப்படும் இந்த தொடரில் 'நிரா படேல்' என்னும் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார்.டெல்லியில் சாதாரண பணியாளர் போல் வேலை செய்யும் இந்த கதாபாத்திரம், உண்மையில் பிரத்தியேக பயிற்சி பெற்ற கொலையாளியாம்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#treadstone

A post shared by @ shrutzhaasan on


இந்த வாய்ப்பை பற்றி கூறிய நடிகை ஸ்ருதி ஹாசன், தான் முறைப்படி இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்க பட்டதாகவும், இதன் மூலம் தன்னை பற்றி நிறைய தெரிந்து கொண்டதாகவும் கூறினார். மேலும் இந்த தொடரின் படப்பிடிப்பு உலகெங்கும் உள்ள பல இடங்களில் நடைபெறும் எனவும், இதில் நடிக்க தான் மிக ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார்.  

இத்தொடரின் படப்பிடிப்பில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கலந்துகொள்ள இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.இத்தொடரில் சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது என்பதால், அதற்காக சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் 'சிங்கம்-3' படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜெகன்னாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு 'லாபம்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

NEXT STORY
அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிகை ஸ்ருதி ஹாசன் Description: 'டிரேட்ஸ்டோன்' என்கிற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles