நடிகை தேவயானியின் தாயார் காலாமானார்

சினிமா
Updated Sep 09, 2019 | 16:44 IST | Zoom

நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தாயார் லட்சுமி ஜெயதேவ் நேற்று காலமானார்.

நடிகை தேவயானியின் தாயார் மரணம், Actress Devayani mother passed away
நடிகை தேவயானியின் தாயார் மரணம்  |  Photo Credit: Twitter

நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தாயார் லட்சுமி ஜெயதேவ் நேற்று உடல்நலக்குறைவால்  காலமானார்.

தமிழில் 'காதல் கோட்டை', 'சூர்யவம்சம்', 'பிரண்ட்ஸ்' என பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை தேவயானி. இவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். தேவயானியின் தம்பி நகுலும் இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' படம் மூலம் அறிமுகமாகி 'காதலில் விழுந்தேன்', 'வல்லினம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தேவயானி, மற்றும் நடிகர் நகுலின் தாயார் லட்சுமி ஜெயதேவ் நேற்று காலமானார். இவரது மரணம் தேவயானி மற்றும் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

மரணமடைந்த தேவயானியின் தாயார் லட்சுமி நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஜெயதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட லட்சுமிக்கு தேவயானி, நகுல், மையூர் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். சென்னையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்து லட்சுமி ஜெயதேவ் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நேற்று காலை உடல் நலக்குறைவால்  தனது 70-வது வயதில் அவர் காலமானார். லட்சுமி ஜெயதேவின் கணவர் ஜெயதேவ் சென்ற ஆண்டு வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.  


      

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...