படபிடிப்பில் காயம் அடைந்த நடிகை அனுஷ்கா

சினிமா
Updated Jun 25, 2019 | 14:54 IST | Times Now

நடிகை அனுஷ்கா 'சைரா நரசிம்மா ரெட்டி' படப்பிடிப்பில் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Anushka Shetty
நடிகை அனுஷ்கா ஷெட்டி   |  Photo Credit: Instagram

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்மா  ரெட்டி' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் எதிர்பாராமல் கீழே விழுந்ததால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

பிரமாண்டமாக உருவாகி வரும் 'சைரா நரசிம்மா  ரெட்டி' படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்கா ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் நடிகை அனுஷ்கா கீழே விழுந்தார். இதனால் அவர் காலில் பலமான காயம் ஏற்பட்டது. அவரை படக்குழுவினர் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். காயம் சரியான பிறகு அனுஷ்கா மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.            

சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பெரும் எதிரிபார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.         
  

NEXT STORY
படபிடிப்பில் காயம் அடைந்த நடிகை அனுஷ்கா Description: நடிகை அனுஷ்கா 'சைரா நரசிம்மா ரெட்டி' படப்பிடிப்பில் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola