'அரசியலுக்கு வர எல்லா தகுதியும் உனக்கிருக்குது’ - அசத்தலாக வெளியான ‘அயோக்யா’ ட்ரெய்லர்!

சினிமா
Updated Apr 19, 2019 | 18:19 IST | Zoom

விஷாலுக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் பார்த்திபன் உட்பட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

cinema, சினிமா
அயோக்யா திரைப்பட ஸ்டில்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் `அயோக்யா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

’சண்டக்கோழி 2’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் புதியதாக நடித்துள்ள திரைப்படம் அயோக்யா. தெலுங்கில் 2015ம் ஆண்டு வெளியான ‘டெம்பர்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் அயோக்யா திரைப்படம்.

இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடன் அசோசியேட்டாக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Ayoga movie still

இத்திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் பார்த்திபன் உட்பட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையில் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ப்லிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ளனர். 

 

 

இத்திரைப்படம் வருகிற மே 10ம் தேதியன்று ரீலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

NEXT STORY
'அரசியலுக்கு வர எல்லா தகுதியும் உனக்கிருக்குது’ - அசத்தலாக வெளியான ‘அயோக்யா’ ட்ரெய்லர்! Description: விஷாலுக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் பார்த்திபன் உட்பட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Loading...
Loading...
Loading...