விஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

சினிமா
Updated Apr 22, 2019 | 12:05 IST | Zoom

முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

 Laabam Shoot Kick Starts
எஸ்பி ஜனநாதனின் லாபம் படப்பிடிப்பு துவங்கியது  |  Photo Credit: Twitter

கோலிவுட்டின் பிஸி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படம் ரசிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்றது. இதைத்தொடர்ந்து எஸ்பி ஜனநாதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை 7சி எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு "லாபம்" என பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார். நடிகர் கலையரசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதியின் சொந்த ஊரான ராஜபாளையத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்ருதிஹாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பூஜையின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

குற்றாலம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் பங்குபெறும் காட்சிகளை இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் படமாக்குகிறார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த "புறம்போக்கு" படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
 

NEXT STORY
விஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது Description: முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
Loading...
Loading...
Loading...