பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்!

சினிமா
Updated Aug 14, 2019 | 09:41 IST | Zoom

நேற்று பிகில் படத்தின் படபிடிப்பு நிறைவு நாளில் அதில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க மோதிரத்தை அணிவித்து படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்.

Vijay gifted golden ring to Bigil crew
விஜய் பரிசளித்த தங்க மோதிரம்  |  Photo Credit: Twitter

பிகில் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட படக் காட்சிகள் நேற்றோடு நிறைவு பெற்றதைய் அடுத்து, படக்குழு உறுப்பினர்கள் 400 பேருக்கு விஜய் தங்க மோதிரம் பரிசளித்தார். 

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைத்துள்ள படம் 'பிகில்'. அப்பா மகன் என்று இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார் என்று தெரிவிக்கும் படி போஸ்டர்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் அவர் கால்பந்து வீரராகவும் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராகவும் நடித்துள்ளார்.

'பிகில்' படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய், நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல கடந்த இரண்டு வாரங்களாக சென்னை தாம்பரம் அவுட்டர் ரிங் ரோடில் விஜய் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அங்கெ கறுப்பு கோட் சூட்டில் விஜய் நடிக்கும் பல புகைப்படங்கள் வைரல் ஆனது.

இந்நிலையில் நேற்றோடு விஜய் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக் காட்சிகள் நிறைவு பெற்றது. இதனால் விஜய் படக்குழுவுக்கு தங்க மோதிரத்தைப் பரிசளித்தார். மேலும் அவர் பயிற்சியாளராக நடிப்பதால் அவரது குழுவில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு ஒரு ஃபுட்பாலில் தன்னுடைய ஸ்டைல் கையெழுத்தான ப்ரியமுடன் விஜய்- யை எழுதி அவர்களுக்கு தங்க மோதிரத்துடன் ஃபுட்பாலையும் பரிசளித்துள்ளார். எப்போது படபிடிப்பு முடிந்தவுடன் அனைவரையும் அமர வைத்து பிரியாணி பரிமாறுவதும் விஜய்யின் வழக்கம். சமீப காலமாக படக்குழுவுக்கு மோதிரம் பரிசாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி நேற்று 400 பேருக்கு தங்க மோதிரத்தை அணிவித்து படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  இதுகுறித்துத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி விஜய்யை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 

 

அவரைப் போலவே மோதிரம் பெற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் அவரைப் புகழ்ந்து ட்வீட் செய்துவருகிறார்கள். 

Image

Image

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...