ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ‘உழைப்பாளர் தினம்’ ட்ரீட் - வழங்கிய நடிகர் விஜய்!

சினிமா
Updated May 26, 2019 | 22:26 IST | Zoom

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் பெயரிடப்படாத ‘தளபதி63’. 70 நாட்களைத் தாண்டி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

tamil nadu, தமிழ்நாடு
விஜய் வழங்கிய மதிய விருந்து  |  Photo Credit: Twitter

சென்னை: தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் இந்த மாதம் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டதை தனது ரசிகர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மதிய உணவுடன் பரிசும் வழங்கி கெளரவித்துள்ளார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் பெயரிடப்படாத ‘தளபதி63’. 70 நாட்களைத் தாண்டி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

நடிகை நயன் தாரா ஹீரோயினாக நடிக்க, விவேக், கதிர், இந்துஜா, யோகி பாபு என பல முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில்தான் ஒவ்வொரு வருடமும் நடிகர் விஜய் உழைப்பாளர் தினத்தில் தனது ரசிகர்களுக்கு மதிய உணவு வழங்கும் பழக்கத்தை இந்த வருடமும் செயல்படுத்தியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் இந்த நிகழ்வை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ‘உழைப்பாளர் தினம்’ ட்ரீட் - வழங்கிய நடிகர் விஜய்! Description: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் பெயரிடப்படாத ‘தளபதி63’. 70 நாட்களைத் தாண்டி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles