6.50 லட்சம் கட் அவுட்டுக்கு ஆப்பு - ‘என்.ஜி.கே’ சூர்யாவின் 215 அடி கட் அவுட்டை அகற்ற உத்தரவு!

சினிமா
Updated May 30, 2019 | 14:52 IST | Times Now

சூர்யாவின் ரசிகர் மன்றத் தலைவரான திருத்தணி எ.டி.ராஜ்குமார் என்பவர் இந்த கட் அவுட்டை 6.50 கோடி ரூபாய் செலவில், வைத்திருந்தார்.

cinema, சினிமா
அகற்றப்பட்ட கட் அவுட்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட பிரமாண்ட கட்-அவுட் அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது. 

திருத்தணி அருகே சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் இணைந்து 215 அடி பிரமாண்ட கட் அவுட் ஒன்றினை உருவாக்கி வைத்திருந்தனர். இந்த கட் அவுட், நாளை திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு இன்று மாலை 4 மணியளவில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட இருந்தது.

சூர்யாவின் ரசிகர் மன்றத் தலைவரான திருத்தணி எ.டி.ராஜ்குமார் என்பவர் இந்த கட் அவுட்டை 6.50 கோடி ரூபாய் செலவில், வைத்திருந்தார். கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஒரு மாதத்திற்கும் மேலாக உழைத்து இந்த கட் அவுட்டினை உருவாக்கியிருந்தனர். 

இந்நிலையில் இந்த கட் அவுட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை என தகவல் கிடைத்ததை அடுத்து கட் அவுட்டினை உடனடியாக அப்புறப்படுத்தம்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி கட் அவுட் வைத்ததாக நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் ஊழியர்கள் கட் அவுட்டை அகற்றினர்.இதனால் ரசிகர்கள் மன வருத்ததில் ஆழ்ந்துள்ளனர். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...