'சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 39வது திரைப்படம்!

சினிமா
Updated Apr 22, 2019 | 22:32 IST | Zoom

சூர்யாவின் 39வது திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்க உள்ள செய்தி வெளியாகியுள்ளது.

cinema, சினிமா
நடிகர் சூர்யா  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறிப்போன நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

‘சிறுத்தை’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள இப்புதிய திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சூர்யாவின் 39வது திரைப்படமாக வெளிவரவிருக்கும் இத்திரைப்படம் சுதா கொங்க்ரா இயக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு அடுத்ததாக வெளிவரலாம் என்று தெரிகிறது.

actor surya

முன்னதாக, சூர்யா-செல்வராகன் கூட்டணியில் ‘என்ஜிகே’ திரைப்படம் வருகிற மே 31ம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தில் நந்த கோபாலன் குமரன் என்னும் அரசியல்வாதியாக சூர்யா நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் 37வது படமாக உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவர இருக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்துதான் சூர்யா, சுதா கொங்க்ராவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தியாவில் முதன்முதலில் பட்ஜெட் விமான பயணத்தை அறிமுகம் செய்த ஜி.ஆர்.கோபிநாத் கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்தான், சூர்யாவின் 39வது திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்க உள்ள செய்தி வெளியாகியுள்ளது. மேலும், சிவா இயக்கத்தில் ஜனவரி மாதம் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் நடிகர் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு ஆகியோரின் நடிப்பில் கிராமத்து கதைக்களத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூர்யாவுடனான இத்திரைப்படத்தை முடித்துவிட்டு, மீண்டும் அஜித்க்கு மற்றொரு படத்தை சிவா இயக்குவார் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது. 

NEXT STORY
'சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 39வது திரைப்படம்! Description: சூர்யாவின் 39வது திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்க உள்ள செய்தி வெளியாகியுள்ளது.
Loading...
Loading...
Loading...