’ஸ்லிம் சிம்புவா திரும்பி வந்துட்டேனு சொல்லு’ - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லிட்டில் சூப்பர் ஸ்டார்!

சினிமா
Updated Apr 26, 2019 | 20:56 IST | Zoom

சென்னை திரும்பியுள்ள சிம்பு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஸ்லிம் சிலம்பரசனாக திரும்பி வந்துள்ளார்.

cinema, சினிமா
நடிகர் சிலம்பரசன்   |  Photo Credit: Instagram

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான டி.ராஜேந்தரின் மகனும், நடிகர் சிம்புவின் இளைய சகோதரருமான குறளரசனின் திருமணம் இன்று சென்னையில் நடைபெறும் நிலையில் அதில் கலந்துகொள்ள வந்த சிம்புவைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் சிம்பு சமீபகாலமாக மிக அதிகளவிலான உடல் எடையுடன் தோற்றமளித்தார். செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திலும் அவரது கூடிய எடை அப்பட்டமாக தெரிந்தது. 

இந்நிலையில், தன்னுடைய உடல் எடையைக் குறைப்பதற்கான சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றிருந்தார். அவர் நேற்று தனது தம்பியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை திரும்பினார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

New look ❤️

A post shared by STR (@str.offcial) on

சென்னை திரும்பியுள்ள சிம்பு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஸ்லிம் சிலம்பரசனாக திரும்பி வந்துள்ளார். நபீலா அகமது என்கிற தனது காதலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் புரிந்து கொள்ளும் குறளரசன் (அ) குரானரசனின் திருமணத்தில் அண்ணனாக வெள்ளை குர்த்தா, பேண்ட்டுடன் அசத்தல் போஸ் கொடுத்துள்ளார் சிம்பு.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wedding ?❤️

A post shared by STR (@str.offcial) on

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்திற்காகவே பழைய சிலம்பரசனாக ஸ்லிம்மாக திரும்பி வந்துள்ளாராம் சிம்பு. குறுகிய காலகட்டத்தில் சிம்பு செம ஃபிட்டாக உடல் எடையைக் குறைத்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

குறளரசனின் திருமணம் இன்று எளிமையாக நடைபெறும் நிலையில், வருகின்ற 29ம் தேதியன்று வரவேற்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
’ஸ்லிம் சிம்புவா திரும்பி வந்துட்டேனு சொல்லு’ - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லிட்டில் சூப்பர் ஸ்டார்! Description: சென்னை திரும்பியுள்ள சிம்பு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஸ்லிம் சிலம்பரசனாக திரும்பி வந்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles