125 கோடி பட்ஜெட்டில் 'மாநாடு' படத்திற்கு போட்டியாக 'மகாமாநாடு'; சிம்பு அதிரடி!

சினிமா
Updated Aug 14, 2019 | 15:44 IST | Zoom

'மாநாடு' படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு 'மகாமநாடு' என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

Actor STR
நடிகர் சிம்பு  |  Photo Credit: Twitter

'மாநாடு' படத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது நடிகர் சிம்பு 'மகாமநாடு' என்ற படத்தை அறிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளதாக சென்ற ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்க்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிவிப்பில் நடிகர் சிம்பு 'மாநாடு' படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். நடிகர் சிம்புவின் தாமதத்தால் படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை என்றும், அவருக்கு பதில் வேறொருவர் கதாநாயகனாக நடிக்க 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.   

இந்நிலையில் இன்று நடிகர் சிம்பு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்க, நடிகர் சிம்பு 'மகாமாநாடு' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தை அவரே இயக்கவுள்ளார். இதனை பற்றி சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறுகையில் 'மகாமாநாடு' 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும், 5 மொழிகளில் இப்படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

'மாநாடு' படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் சிம்பு, அதற்கு போட்டியாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை சிம்பு ரசிகர்கள் வரவேற்றாலும் பலரும் இதனை சரமாரியாக விமர்சிக்கின்றனர். இது போன்ற பல அறிவிப்புகளை நடிகர் சிம்பு பல முறை வெளியிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு ஆர்யா, மாதவன் நடிப்பில் வெளியான வேட்டை படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்கு போட்டியாக வேட்டை மன்னன் என்று ஒரு படத்தை இதே போன்று துவங்கினார். மேலும் 2017-ஆம் ஆண்டு கூட இன்டெர்வல் மற்றும் பாடல்கள் இல்லாமல் ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இது வரை இந்தப் படங்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. சீமான் இயக்கத்திலும் 3 படம் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதை பற்றியும் எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் இந்த 'மகாமாநாடு' படம் வெளியாகுமா அல்லது அறிவிப்போடு நின்றுவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

NEXT STORY
125 கோடி பட்ஜெட்டில் 'மாநாடு' படத்திற்கு போட்டியாக 'மகாமாநாடு'; சிம்பு அதிரடி! Description: 'மாநாடு' படத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு 'மகாமநாடு' என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...