உன்னுடைய துணிச்சலை நான் வணங்குகிறேன் - சூர்யாவுக்கு சத்யராஜ் வெளியிட்ட வீடியோ

சினிமா
Updated Jul 23, 2019 | 16:03 IST | Zoom

சூர்யாவின் பிறந்தநாளுக்கு நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sathyaraj - Suriya
Sathyaraj - Suriya   |  Photo Credit: Twitter

இன்று சூர்யா தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தனது தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ஜாக்பாட் படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டார். சமீபத்தில் அவர் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக விமர்சனத்தை வைத்தது பலரின் கவனத்தைப் பெற்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர் போன்றோர் சூர்யாவுக்கு ஆதரவாகக் தங்களது குரல்களைப் பதிவுசெய்தனர். இந்நிலையில் சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் நடிகர் சத்யராஜ் தனது வாழ்த்தை வீடியோவப் பதிவு செய்துள்ளார். 

அந்த வீடியோவில், ‘’பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா, உன்னுடைய ஒரு வயது வரை நான் உன்னை தூக்கி வளர்த்திருக்கிறேன். இத்தனை வருடங்களாக உன்னுடைய பிறந்தநாளுக்கு ஃபோனிலோ, நேரிலோ, வாட்சப்பிலோதான் வாழ்த்துக்கூறுவேன். ஆனால் இந்த முறை வீடியோ மூலம் சமூக வலைதளத்தில் உனக்கு வாழ்த்துச் சொல்ல நினைத்தேன். ஏனென்றால் நான் உன்னை நினைத்துப் பெருமை படுகிறேன். அதற்குக் காரணம் ஒரு சமூக நீதிக்காக நீ கொடுத்த குரல்.

ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கும் குணம் நமக்கேன் வம்பு என்பதுதான். அதுவும் ஒரு நடிகனாகி நிறைய சம்பாதித்து விட்டால் இந்த நமக்கேன் வம்பு என்பது இன்னும் அதிகமாகிவிடும். எத்தனையோ சமூகப் போராளிகள் போராடும்போது நானும் அவர்ளுடன் ஒரு ஓரமாக குரல் கொடுத்திருக்கிறேன். ஒரு மாஸ் ஹீரோவாக குரல் கொடுப்பதற்கு பல பிரச்னைகளையும் சிக்கல்களையும் சந்திக்க வேண்டும். பல இழப்புகளையும் சந்திக்கவேண்டும். நான் இந்த சிரமங்களை அனுபவித்துள்ளதால் என்னால் உன்னுடைய மனநிலையை உணர முடியும். அதனால் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்.

 

 

குரல் கொடுக்கிறேன் என்று நுனிப் புல் மேய்ந்து மேலோட்டமாகக் கூறாமல், அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து என்னக் கருத்தைக் கூறவேண்டுமோ அதனை சரியாகக் கூறியிருக்கிறாய். அதனால் இந்தப் பிறந்தநாளுக்கு வயதில் மூத்தவன் என்பதனால் வாழ்த்துவதோடு, உன்னுடைய துணிச்சலை நான் வணங்குகிறேன்’’ என்று உணர்வுப் பூர்வமான தனது பிறந்தநாள் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...