நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது; பெண் இவர்தான்!

சினிமா
Updated Sep 22, 2019 | 17:06 IST | Zoom

நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. 

Actor Sathish got engaged
Actor Sathish got engaged  |  Photo Credit: Twitter

நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. 

கிரேசி மோகனின் நாடகக் குழுவில் பணியாற்றியவர் நடிகர் சதீஷ் ஜெர்ரி என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் அறிமுகமானார். மதராசப்பட்டினம், ரெமோ, கத்தி, தங்கமகன், பைரவா போன்ற பல படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ள சதீஷ், தற்போது கண்ணை நம்பாதே, தீமை தான் வெல்லும், டெடி, 100% காதல் போன்ற பல படங்களிலும் நடித்து வருகிறார்.

அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் புகைப் படங்கள் பரவி வருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது நடிகர் சதீஷ்  சமீபத்தில் வெளியான சிக்ஸர் படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் இயக்குநர் சாச்சியின் தங்கையைதான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 சதீஷ் வீட்டிலும் சாச்சியின் வீட்டில் அவரது தங்கைக்கும் வரன் பார்த்து வந்ததை அடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி இந்த திருமணத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. உறவினர்களுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் பற்றிய அறிவிப்பை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Image result for sathish engagement

Image result for sathish engagement

Image result for sathish engagement

NEXT STORY