சர்ச்சையான டகால்டி போஸ்டர்: சந்தானம் விளக்கம்!

சினிமா
Updated Jun 08, 2019 | 16:27 IST | Zoom

சந்தானத்தின் டகால்டி பட ஃபர்ஸ்ட்லுக்கில் சந்தானம் புகைப்பிடிப்பது போன்று இருந்ததால் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அதற்கு சந்தானம் விளக்கம் அளித்துள்ளார்.

Santhanam Dagaalty still
Santhanam Dagaalty still  |  Photo Credit: Twitter

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் முழுநேர ஹீரோவாகி பல படங்கள் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் ’டகால்டி’. இதனை ஷங்கரின் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, ராதாரவி, ரேகா, ஆகியோர் உடன் நடிக்கின்றனர். படத்தைப் பற்றி இயக்குனர் விஜய்ஆனந்த் கூறும்போது இது ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் படம். எப்படி ஜாக்கிஜான் படத்தில் ஸ்டன்ட் காட்சிகள் காமெடியாக இருக்குமோ அதே போன்று இதிலும் முயற்சி செய்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தின் கதைகளம் மும்பை-புனே என வட இந்தியாவிலும்  எடுக்கப்படுவதால் இந்தி நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இவைத் தவிர இப்படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரம், கடப்பா, புனே, மும்பை, காரைக்குடி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. போஸ்டரில் சந்தானம் புகை பிடிப்பது போன்று காட்சி இருந்தது. எப்படி சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு எதிர்ப்பு வந்ததோ அதே போல சந்தானத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. 

 

 

உடனே அன்று மாலையே இரண்டாவது போஸ்டரைப் படக்குழு வெளியீட்டு இருந்தனர். இருப்பினும் முதல் போஸ்டருக்கு எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அதனால் தற்போது இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். அதாவது டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டது. அது புகைபிடிப்பதை  ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பலர் தெரிவித்திருந்தனர். வருங்காலத்தில் இதுபோன்ற போஸ்டர் வெளியிட மாட்டோம் என்பது உறுதியுடன் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த போஸ்டரை சந்தானம் நீக்கவில்லை. 

 

 

 

NEXT STORY