என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்- ராகவா லாரன்ஸ்

சினிமா
Updated Apr 26, 2019 | 16:49 IST | Zoom

என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Actor Raghava Lawrence, நடிகர் ராகவா லாரன்ஸ்
Raghava Lawrence   |  Photo Credit: Twitter

நாம் தமிழர் கட்சியினர் ராகவா லாரன்ஸ் பற்றி அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையெடுத்து லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், என் கட்சியினர் லாரன்ஸ் மீது அவதூறு பரப்ப மாட்டார்கள். அப்படி என் கட்சியினர் செய்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக சீமான் கூறியிருந்தார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நண்பரும், பட தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில், நடிகர் லாரன்ஸை கடுமையாக விமர்சித்திருந்தார். இதை கண்டித்து திருநங்கைகள் பலரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. "என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்...  என் மீது அக்கறை உள்ள  ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்...அப்படி எதுவும் செய்யாதீர்கள்..பொறுமையை கடை பிடியுங்கள்... நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதையே செய்வோம்.. அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்..

எனக்கு ஒரு  சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.. படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவை எடுப்போம்.. அதுவரை அமைதி காப்போம்... கடவுள் நமக்கான நல்லதை செய்வார்.. நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்.. நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

NEXT STORY
என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்- ராகவா லாரன்ஸ் Description: என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles