‘இன்ஸ்டாகிராம்’ல் என்ட்ரி கொடுத்த நடிகர் பிரபாஸ்; நொடிக்கு நொடி பாலோயர்ஸ்!

சினிமா
Updated Apr 19, 2019 | 17:45 IST | Zoom

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் அவருக்கு கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கையும் மாஸ். 

cinema, சினிமா
சாஹோவில் ஸ்ரத்தா கபூருடன் பிரபாஸ்  |  Photo Credit: Twitter

சென்னை: ‘பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அட்டகாசமாக நுழைந்துள்ளார்.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் அவருக்கு கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கையும் மாஸ். 

இந்நிலையில், பிரபாஸ் தற்போது சுஜீத் இயக்கத்தில் ‘சாஹோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூடவே, ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் திரைப்படம் ஒன்றிலும் கமிட் ஆகியிருக்கிறார். சாஹோ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியாகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas) on

 

இந்நிலையில்தான், பிரபாஸ் நீண்ட நாட்கள் கழித்து பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனக்கான பக்கத்தை உருவாக்கியுள்ளார். ஃபேஸ்புக்கில் ஏற்கனவே ஆக்டிவாக இருக்கும் பிரபாஸ், முதன்முறையாக இன்ஸ்டா அக்கவுண்ட்டும் துவங்கியுள்ளார். 

https://www.instagram.com/actorprabhas/ என்கிற பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இயங்கும் நடிகர் பிரபாஸ், முதன்முதலில் தனது ‘பாகுபலி’ திரைப்பட புகைப்படத்தையே புதன்கிழமையன்று பதிவிட்டுள்ளார். அதன்பிறகு எந்தவொரு புகைப்படத்தையும் அவர் பதிவிடாவிட்டாலும் கூட தற்போது அவருக்கு 893K பாலோயர்கள் இருக்கின்றனர். 

புகைப்படம் இல்லாத போதே 700K பாலோயர்களை சம்பாதித்துக் கொண்ட பிரபாஸின் இன்ஸ்டா அக்கவுண்ட், தற்போது இந்த க்ளாஸி புகைப்பட பதிவிற்கு பின்னர் 890K பாலோயர்களைக் கொண்டுள்ளது.

அதுவும் அந்த பாகுபலி ஸ்டில்லுக்கு இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
‘இன்ஸ்டாகிராம்’ல் என்ட்ரி கொடுத்த நடிகர் பிரபாஸ்; நொடிக்கு நொடி பாலோயர்ஸ்! Description: இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் அவருக்கு கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கையும் மாஸ். 
Loading...
Loading...
Loading...