'ஒத்த செருப்பு' படத்திற்கு அங்கிகாரம் கோரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார் பார்த்திபன்!

சினிமா
Updated Sep 11, 2019 | 19:51 IST | Zoom

'ஒத்த செருப்பு' படத்திற்கு மத்திய அரசு சார்பில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் ரா.பார்த்திபன்.

'ஒத்த செருப்பு' படத்திற்கு அங்கிகாரம் கோரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார் பார்த்திபன்,Actor Parthipan meets finance minister Nirmala Sitharaman regarding tax redemption for 'Oththa Seruppu'
'ஒத்த செருப்பு' படத்திற்கு அங்கிகாரம் கோரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார் பார்த்திபன்  |  Photo Credit: Twitter

'ஒத்த செருப்பு' படத்திற்கு அரசு சார்பில் உரிய அங்கிகாரம் வழங்க கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் நடிகர் பார்த்திபன்.

நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட ரா பார்த்திபன், ஒரே ஒரு கதாபாத்திரம் கொண்ட முழுநீள திரைப்படமான 'ஒத்த செருப்பு' படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தை எழுதி இயக்கியது மட்டுமல்லாமல் அவரே அதில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் ஒரே கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு சிறிய அறையில் நடப்பது போல் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஆமிர் கான் என பலரும் பாராட்டுகளை தெரித்துள்ளார்கள். இப்படம் இந்த மாதம் செப்டம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இதனை விளம்பரப்படுத்த பல யுக்திகளை கையாண்டு வருகிறார் ரா.பார்த்திபன். 'நண்பன்' பட பாடலில் வருவது போல 'ஒத்த செருப்பு' படத்தின் போஸ்டர்களை ஒரு ரயில் முழுவதும் ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது உலக அரங்கிலேயே புதிய முயற்சியான 'ஒத்த செருப்பு'படத்திற்கு மத்திய அரசு சார்பில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 'ஒத்த செருப்பு' படத்துக்கு மாநில அரசு மற்றும் மத்திய அரசும் வரிச்சலுகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் கோரிக்கையை கேட்ட நிர்மலா சீதாராமன் இது தனது துறைக்கு சம்மந்தப்பட்டதில்லை என்றும், ஒரு கடிதம் கொடுங்கள் அதனை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

 

 

பின்னர் நிர்மலா சீதாராமன் கூறியபடி ரா.பார்த்திபன் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அவரின் கோரிக்கையை அந்த கடிதத்தில் எழுதி, அரசு இப்படத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் பட்சத்தில் மக்கள் மத்தியில் கவன ஈர்ப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.               

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...