ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்ஹாசன்

சினிமா
Updated May 19, 2019 | 15:19 IST | Zoom

இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் பேசிய நடிகர் கமல், ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Makkal Needhi Maiam leader, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

சென்னை: தன் மீது செருப்பு வீசப்பட்டதையும் காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி சென்னையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பேசினார்.

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் "ஒத்த செருப்பு" இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பேசிய கமல்ஹாசன் " எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். அதை நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில், காந்தி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்பு தவறி கீழே விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார். ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு சொருப்பையும் கழற்றிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். நான் காந்தியின் ரசிகன்.

நான் சென்ற இடத்தில் என் மீது ஒரு செருப்பு வீசினர். இன்னொரு செருப்பும் என்னை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது ஒரு செருப்பு கிடைத்துவிட்டது. மற்றொரு செருப்பு விரைவில் கிடைக்கும். அதற்கான தகுதி எனக்கு உண்டு. செருப்பை போட்டவருக்கு தான் அவமானம்". இவ்வாறு கமல் பேசினார். 
 

NEXT STORY
ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்ஹாசன் Description: இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் பேசிய நடிகர் கமல், ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles