குழந்தைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த நடிகர் கமல்ஹாசன்!

சினிமா
Updated Sep 21, 2019 | 11:01 IST | Zoom

'ஃபிளைட்ஸ் ஆப் பாண்டஸி' என்னும் இயக்கத்தின் மூலம் விமானத்தில் சென்னைக்கு சுற்றுலா வந்துள்ள ஏழை குழந்தைகளுடன் நடிகர் கமல் ஹாசன் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

மெட்ரோவில் குழந்தைகளுடன் பயணித்தார் கமல் ஹாசன்,Actor Kamal Haasan travels in chennai metro rail with underprivileged children
மெட்ரோவில் குழந்தைகளுடன் பயணித்தார் கமல் ஹாசன்  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் சென்னை மெட்ரோ ரயிலில் குழந்தைகளுடன் நேற்று பயணம் செய்தார்.

ரவுண்டு டேபிள் என்னும் தொண்டு நிறுவனம், பல நிறுவனங்களுடன் ஒன்று சேர்ந்து 'பிலைட்ஸ் ஆப் பாண்டஸி' என்னும் இயக்கத்தின் மூலம் ஏழை குழந்தைகளை சுற்றுலாவுக்கு விமானத்தில் அழைத்து சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு கூட குழந்தைகள் விமானம் மூலம் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த வகையில் தற்போது மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடி பகுதிகளில் இருந்து 20-க்கும் மேலான குழந்தைகள் சுற்றுலாவுக்கு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.  

சுற்றுலாவின் ஒரு பகுதியாக குழந்தைகள் நேற்று நடிகர் கமல் ஹாசனை சென்று சந்தித்துள்ளனர். பின்னர் குழந்தைகள் கமலுடன் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தனர். தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை இரு மார்க்கத்திலுமான இப்பயணத்தில் கமல் குழந்தைகளுடன் உரையாடினார். குழந்தைகளும் கமலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயில் பயணத்தை மகிழ்ச்சியாக களித்தனர்.   

 

 

 

 

இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள ஏழை குழந்தைகள் இது போன்ற சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். 2015-ஆம் ஆண்டு கூட இதே போன்ற ஒரு நிகழ்வின் போது யுவராஜ் சிங் குழந்தைகளை சென்று சந்தித்தார்.   
          
 

NEXT STORY