நகைச்சுவை நாடக உலகின் ஜாம்பவான் கிரேஸி மோகன் காலமானார்!

சினிமா
Updated Jun 10, 2019 | 15:43 IST | Zoom

நாடக உலகை தன்னுடைய நகைச்சுவையால் கட்டிப் போட்டவர் கிரேஸி மோகன். இவருடைய நாடக கதாப்பாத்திரங்களான மாது, ஜானகி, சீனு ஆகியவை நாடக உலகில் மிகவும் பிரசித்தி பெற்றவை. 

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், வசனகர்த்தாவும், நகைச்சுவை நாடக உலகில் மிகச்சிறந்த இடம் பிடித்தவருமான கிரேஸி மோகன் இன்று மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.

1949ம் ஆண்டு பிறந்தவர் கிரேஸி மோகன். பொறியியல் கல்வி கற்ற கிரேஸி மோகனுக்கு, அதைவிட நாடக உலகில் நாட்டம் அதிகம். அதனாலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிய போதும், 30க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை உருவாக்கி அதில் நடித்துள்ளார். தூர்தர்ஷனிலும் அடிக்கடி இவருடைய நாடகங்கள் ஒளிப்பரப்பாகியது ஒரு காலம். ’ஆச்சி இன்டர்நேஷனல், மெட்டி ஒலி’ ஆகியவை இவருடைய ட்ரேட் மார்க் வசன நாடகங்கள். 

actor gracy mohan

நாடக உலகை தன்னுடைய நகைச்சுவையால் கட்டிப் போட்டவர் கிரேஸி மோகன். இவருடைய நாடக கதாப்பாத்திரங்களான மாது, ஜானகி, சீனு ஆகியவை நாடக உலகில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவருடைய வசனம் மற்றும் கதை இடம்பெறும் திரைப்படம் என்பதை ‘ஜானகி’ என்கிற பெயரிலேயே தெரிந்துகொள்ளலாம். ஏனெனில், இவருடைய முக்கால்வாசி படைப்புகளில் ஜானகி என்கிற பெயர் விடாமல் இடம் பிடித்திருக்கும்.  

சட்டென்று காமெடியை அள்ளித்தெளிக்கும் இவரது திறமையால், ’பொய்க்கால் குதிரை’ என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக சினிமா உலகில் வசனகர்த்தாவாக அறிமுகமானார் கிரேஸி மோகன்.  நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்தான வசன கர்த்தாவாக அவருடைய பல காமெடி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் கிரேஸி மோகன். ’காதலா காதலா, பஞ்ச தந்திரம், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், அருணாச்சலம், ஆஹா, நான் ஈ’ என்று படத்தில் காமெடி என்பது போய், காமெடியே படமாக எழுதும் திறமை கிரேஸிக்கு மட்டுமே சாத்தியமானது. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். 

இத்தகைய திறமைகளுக்கு சொந்தக்காரரான கிரேஸி மோகன், திடீர் மாரடைப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனிக்காததால் கிரேஸி மோகனின் உயிர், இன்று மதியம் 2 மணியளவில் பிரிந்தது. கிரேஸி மோகனின் மறைவுக்கு எஸ்.வி.சேகர், நாசர், சார்லி என பல்வேறு பிரபலங்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

NEXT STORY
நகைச்சுவை நாடக உலகின் ஜாம்பவான் கிரேஸி மோகன் காலமானார்! Description: நாடக உலகை தன்னுடைய நகைச்சுவையால் கட்டிப் போட்டவர் கிரேஸி மோகன். இவருடைய நாடக கதாப்பாத்திரங்களான மாது, ஜானகி, சீனு ஆகியவை நாடக உலகில் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles