இரண்டு குழந்தைகளோடு திருமணம் செய்த ’தி ராக்’ தம்பதியர்!

சினிமா
Updated Aug 20, 2019 | 11:17 IST | Zoom

நடிகர் டிவைன் ஜான்சன் தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை மணந்தார்.

நடிகர் டிவைன் ஜான்சன் திருமணம், Actor Dwayne Johnson Marriage
நடிகர் டிவைன் ஜான்சன் திருமணம்  |  Photo Credit: Instagram

நடிகர் டிவைன் ஜான்சன் (எ) 'தி ராக்' தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை நேற்று மணந்தார். 

உலகின் பிரபல ரெஸ்லராக இருந்த  'தி ராக்' இன்று நடிகராகவெ பலருக்குப் பரிச்சயம். முதன்முதலில் 2001-ஆம் ஆண்டு வெளியான 'தி மம்மி ரிட்டன்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ’பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படங்களில் இவர் லூக் ஹாப்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். இறுதியாக அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த 'ஹாப்ஸ் அண்ட் ஷா' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இது தவிர அவர் நடிப்பில் வெளியான 'சான் ஆன்ட்ரியாஸ்', 'ஜுமான்ஜி', 'பேவாட்ச்' ஆகிய படங்களும் உலகெங்கும் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. மேலும் மோவானா அனிமேஷன் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரமான மோவிக்கு இவர்தான் டப்பிங். அதில் பாடலும் பாடியிருப்பார்.

இந்நிலையில் டிவைன் ஜான்சன் தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை நேற்று மியாமியில் மணந்துகொண்டார். இவர்களது திருமணம் மியாமி கடற்கரையில் பெரிய ஆரவாரம் இன்றி ரகசியமாய் நேற்று நடைபெற்றது. 12 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் வெள்ளநிற ஆடையில் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர்  டிவைன் ஜான்சன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

We do. August 18th, 2019. Hawaii. Pōmaikaʻi (blessed) @laurenhashianofficial❤️ @hhgarcia41?

A post shared by therock (@therock) on

 

நடிகர் டிவைன் ஜான்சனுக்கு இது இரண்டாவது திருமணம். டானி கார்சியா என்பவருடன் 1997-ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2007-ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் வசந்த காலம் என்று சொல்லும் இந்த ஆகஸ்டில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்தபோது, லாரென் கருவுற்றார். அதனால் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் இந்த வருட வசந்த காலத்தில் திருமணத்தை செய்துகொண்டதாக இந்த ஜோடி கூறியுள்ளது.

வாழ்த்துக்கள் தி ராக்!                           
 

NEXT STORY
இரண்டு குழந்தைகளோடு திருமணம் செய்த ’தி ராக்’ தம்பதியர்! Description: நடிகர் டிவைன் ஜான்சன் தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை மணந்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles