'துட்டுக்கு ஓட்டு போட்டு வாழ்வை வீணாக்காதீர்கள்’ - இயக்குனர் பார்த்திபன் விழிப்புணர்வு ட்வீட்!

சினிமா
Updated Apr 16, 2019 | 14:54 IST | Times Now

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தொடர்ச்சியாக வாக்களிப்பது குறித்த ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். 

election 2019, தேர்தல் 2019
நடிகர் பார்த்திபன்  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தமிழ் சினிமா உலகின் பிரபலங்கள் பலரும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அதில் முக்கியமாக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தொடர்ச்சியாக வாக்களிப்பது குறித்த ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். 

'மாம்பழமோ? மாபெரும் பழமோ?
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,
தேர்தல்=தேத்துதல்(பணம்)
வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே.காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு’ என்றும், 

'ஓட்டைப்  போடாதீர்கள்
ஓட்டைப்  போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப்  போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின்
ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப்  போடாதீர்கள்’ என்றும் கவிதையாக தன்னுடைய விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டு வருகிறார்.

அதேபோன்று ’லெட்ஸ் வோட்’ என்கிற தேர்தல் விழிப்புணர்வு பாடல் ஒன்றை ஷேர் செய்து 100% ஓட்டளிப்போம் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் முருகதாஸ். 

NEXT STORY
'துட்டுக்கு ஓட்டு போட்டு வாழ்வை வீணாக்காதீர்கள்’ - இயக்குனர் பார்த்திபன் விழிப்புணர்வு ட்வீட்! Description: நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தொடர்ச்சியாக வாக்களிப்பது குறித்த ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். 
Loading...
Loading...
Loading...