’அப்படிலாம் நடக்காது..நடக்கவும் கூடாது’ -அசத்தலாக வெளியான அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ ட்ரெய்லர்!

சினிமா
Updated Jun 12, 2019 | 18:40 IST | Zoom

ஆகஸ்ட் 10ம் தேதியன்று இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

cinema, சினிமா
நேர் கொண்ட பார்வையில் நடிகர் அஜித்  |  Photo Credit: YouTube

சென்னை: நடிகர் அஜித்குமாரின் வித்யாசமான நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பினைக் கிளப்பி வருகின்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் ‘பிங்க்’. வெவ்வேறு சூழ்நிலைகளைச் சார்ந்த் மூன்று தனியாக வசிக்கும் பெண்களும், அவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டலும், அதனால் ஏற்படும் வழக்கும்தான் கதை. அந்த பெண்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் அசத்தியிருப்பார் நடிகர் அமிதாப் பச்சன். 

அதே வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிறது ‘நேர் கொண்ட பார்வை’. இதில் டாப்ஸி கதாப்பாத்திரத்தில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார். எதிர்த்தரப்பு வழக்கறிஞராக ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே. 

மேலும், இவர்களுடன் இணைந்து ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை இயக்கிய ஹெ.வினோத் இந்த திரைப்படத்தின் இயக்குனர். 

ஆகஸ்ட் 10ம் தேதியன்று இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இந்த ட்ரெய்லர் முதலில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் அஜித் மாஸ் காட்டியிருக்கிறார் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. இதுவரையில் கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கதைகளை அவர் தேர்ந்தெடுத்து வந்த நிலையில், நேர் கொண்ட பார்வை அவரை ஒரு வித்யாசமான கோணத்தில் காட்டியிருக்கிறது.

 

 

 

’ஒருத்தர் மேல நீங்க விசுவாசம் காட்டறதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்க படுத்துறீங்க?, ஆர் யூ எ வெர்ஜின்?’ என பயரிங் டயலாக்குகள், அல்டிமேட் நீதிமன்ற சீன்கள், வழக்கறிஞராக அஜித்தின் கம்பீர தோற்றம் என பரபரப்பாக வெளியாகியுள்ளது நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர். அஜித் ரசிகர்களுக்கு ஒரு அல்டிமேட் விஷூவல் ட்ரீட்!

NEXT STORY