முறுக்கு மீச கெட்டப்...'தல-60' படத்தில் அஜித்துக்கு என்ன ரோல் தெரியுமா?

சினிமா
Updated Oct 08, 2019 | 12:29 IST | Zoom

முறுக்கு மீசையுடன் நடிகர் அஜித் காணப்படும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முறுக்கு மீசையுடன் தல அஜித்,Actor Ajith to sport muruku meesai for Thala60
முறுக்கு மீசையுடன் தல அஜித்  |  Photo Credit: Twitter

'தல-60' படத்தை பற்றிய புது அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தபடத்தையும்  'நேர்கொண்ட பார்வை' தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் நடிகர் அஜித் சில நாட்களுக்கு முன் மிகவும் இளமையான கெட்டப்பில் விமான நிலையத்தில் காணப்பட்டார்.

கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்த அஜித் தற்போது 'தல-60' படத்தில் புது கெட்டப்பில் நடிக்கவுள்ளார். முறுக்கு மீசையுடன் இவர் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக 'என்னை அறிந்தால்' படத்தில் போலீசாக நடித்த அஜித் தற்போது மீண்டும் காவலர் உடையை அணியவுள்ளார்!

 

 

அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் பெரும் பொருட்ச்செலவில் உருவாகவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. மேலும் படத்தில் கார் சேஸ், பைக் சேஸ் என பல அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெறவுள்ளது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.             
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...