விஜய் 63 படப்பிடிப்பில் விபத்தில் அடிபட்டவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

சினிமா
Updated Apr 24, 2019 | 14:12 IST | டைம்ஸ் நவ்

படுகாயம் அடைந்த செல்வராஜ் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய்63
விஜய்63  |  Photo Credit: Twitter

சர்கார் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நயன் தாரா நாயகியாக நடிக்க, பரியேறும் பெருமாள் கதிர், இந்தூஜா, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சென்னையில் நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஸ்போர்ஸ் திரைப்படம் என்பதால் பெரிய அளவில் மைதானம் போன்ற செட் அமைக்கப்பட்டு ஃப்லிம் சிட்டியில் ஹூட்டிங் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டு இருந்த ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்ததில் அங்கே நின்று கொண்டிருந்த செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

படுகாயம் அடைந்த செல்வராஜ் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வராஜ் படப்பிடிப்பில் எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது. 

 

 

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் செல்வராஜை புதன்கிழமை மதியம் நடிகர் விஜய் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் அவரது உடல்நிலைப் பற்றிக் கேட்டறிந்துவிட்டு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு சென்றார். 
 

 

NEXT STORY
விஜய் 63 படப்பிடிப்பில் விபத்தில் அடிபட்டவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்! Description: படுகாயம் அடைந்த செல்வராஜ் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles