A1, டியர் காம்ரேட்.. இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களின் லிஸ்ட் இங்கே!

சினிமா
Updated Jul 24, 2019 | 11:23 IST | Zoom

இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய தொகுப்பு

Movies Releasing this week
இந்த வார ரிலீஸ்   |  Photo Credit: Twitter

இந்த வாரம் தமிழில் 3 படங்களும், ஹிந்தியில் கங்கனா ரணாவத் மற்றும் ராஜ்குமார் ராவ்  நடிப்பில் 'ஜுட்ஜ்மென்டைல் ஹை கியா' படமும் வெளியாகவுள்ளது. இது மட்டும் இன்றி விஜய் தேவரகொண்டா நடிப்பில் 4 மொழிகளில் வெளியாகும் 'டியர் காம்ரேட்' படமும் திரைக்கு வருகிறது.   

ஏ1:

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஏ1'. இப்படத்தில் தாரா அலிஷா பெர்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், மனோகரன், 'லொள்ளு சபா' ஸ்வாமிநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படம் ஜூலை 26-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

 

 

டியர் காம்ரேட்:

இந்த வார ரிலீஸில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ரொமான்ஸ், ஆக்ஷன் கதைகளம் கொண்ட 'டியர் காம்ரேட்' படத்தில் ராஷ்மிகா கிரிக்கெட்டராக நடித்துள்ளார். பரத் கம்மா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் இந்த வாரம் ஜூலை 26-ஆம் தேதி வெளியாகுகிறது.  

 

 

கொளஞ்சி: 

தனராம் சரவணன் இயக்கியுள்ள 'கொளஞ்சி' படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'மூடர்கூடம்' படத்தை இயக்கிய நவீன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக பல காரணங்களால் வெளியாகாமல் இருந்த இப்படம் ஜூலை 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

 

சென்னை பழனி மார்ஸ்:    

'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை இயக்கிய பிஜு விஸ்வநாத் அடுத்ததாக இயக்கியுள்ள படம் 'சென்னை பழனி மார்ஸ்'. நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அவர் வசனமும் எழுதியுள்ளார். புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

 

 

NEXT STORY
A1, டியர் காம்ரேட்.. இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களின் லிஸ்ட் இங்கே! Description: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய தொகுப்பு
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola