’இரட்டை அர்த்த வசனம்..கவர்ச்சி ஆடைகள்’ - பிக்பாஸ் 3க்கு தடை கோரி மனுத்தாக்கல்!

சினிமா
Updated Jun 18, 2019 | 21:16 IST | Zoom

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான சுதன் இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

cinema, சினிமா
பிக்பாஸ் சீசன் 3 - கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழில் விரைவில் ஒளிப்பரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3க்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் வருகின்ற 23ம் தேதி முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 15 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3க்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான சுதன் இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி, கவர்ச்சிகரமான ஆடைகள், இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்கள், சண்டை, சச்சரவு என இளைஞர்கள், பார்வையாளர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் மனரீதியாக பாதிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட் இருப்பதாகவும், எனவே இந்திய பிராட்காஸ்ட் பவுண்டேசன் எனப்படும் ஐபிஎஃப் தணிக்கை சான்று பெறாமல் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தொலைகாட்சி நிறுவன, எண்டோமால் நிறுவனம், கமல்ஹாசன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...