Mr local Preview: மிஸ்டர் லோக்கலைப் பார்க்க இந்த 5 காரணங்கள் போதும்!

சினிமா
Updated May 16, 2019 | 10:55 IST | விபீஷிகா

படம் நாளை வெளியாகவிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்பதற்கான ஐந்து விஷங்கள் இங்கே...!

mr local preview
mr local preview  |  Photo Credit: Twitter

நயன் தாரா- சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவானத் திரைப்படம் மிஸ்டர் லோக்கல். சிவகார்த்திகேயன் படம் என்றாலே ஃபேமிலி ஆடியன்ஸுக்கு தீபாவளிதான். அதுவும் இந்தப் படம் கோடை விடுமுறையில் வேறு ரிலீஸ் ஆவதால், விடுமுறைக்கு வீட்டு வந்திருக்கும் குட்டி, சுட்டீஸுடன் படம் பார்க்க தயாராகிவிடுவார்கள் ரசிகர்கள், குறிப்பாகப் பெண்கள். இருந்தாலும் படம் நாளை வெளியாகவிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்பதற்கான மேலும் ஐந்து விஷங்கள் இங்கே...!

நயன்தாரா - சிவகார்த்திகேயன்

நயன் தாரா நடிக்கும் படம் என்றாலே ஏதோ ஒரு ஸ்பெஷல் இல்லாமல் நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நம்பத் தொடங்கி பல வருடம் ஆகிவிட்டது. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அப்படி. வேலைக்காரன் படத்தில் கதையின் பொருட்டு அவரின் காட்சிகள் மிகவும் குறைவாகவே அமைந்துவிட்டது. ஒரு ஜாலியான திரைக்கதையில் அதுவும் நம் பக்கத்து வீட்டுப் பையன் சிவாகார்த்திகேயனுடன் கைகோர்த்திருக்கிறார். இந்தப் புது காம்போவைப் பார்க்கத் தியேட்டருக்கு செல்லவேண்டும் தானே!

மிஸ்டர் லோக்கல்

இயக்குநர் ராஜேஷ்

சிவா மனசுல சக்தி தொடங்கி பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஒகே, ஆல் இல் ஆல் ஆழகுராஜா என நாம் பார்க்கும் , மீம் ரெஃபரன்ஸ் எடுக்கும் அனைத்து காமெடி சீக்வன்ஸுகளும் இவர் படம்தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட இவர் வசனத்தில் உருவானதுதான். ராஜேஷ் படத்துக்கு சென்றால் எல்லாத்தையும் மறந்துவிட்டு சிரித்துவிட்டு வரலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் நிச்சயம் பார்க்கப் போகலாம்!

மிஸ்டர் லோக்கல்

நடிகர்கள்

எஸ்.எம்.எஸ் - ஊர்வசி, பாஸ் - லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஓகே ஓகே - சரண்யா, சந்தானம் என ராஜேஷ் படத்தில் ஹீரோக்களை விட அம்மா கேரக்டர், ஹீரோவின் நண்பர்கள் கதாப்பாத்திரங்கள் அதிகம் ஸ்கோர் செய்யும். நம் பக்கத்து வீட்டுக் கதை போல பொருத்திக் கொள்வது இவர்களால்தான். அப்படி இந்தப்படத்தில் ராதிகா, ரோபோ சங்கர்,  யோகிபாபு, தம்பி ராமைய்யா என ஒரு பட்டாளமே இருக்கிறது. இது போதாதா?

கதைக் களம் 

ட்ரைலரைப் பார்க்கும் போது பிஸினஸ் வுமன் நயன் தாராவுக்கும் மிஸ்டர் லோக்கல் சிவாவுக்கும் இடையில் நடக்கும் பிரச்னைகளை ஜாலியாகச் சொல்லும் கதை என்று தெரிகிறது. மன்னன், படையப்பா, விஐபி-2 என இந்தக் கதைகளத்தில் ஹீரோயின் டாமினேஷனில் வந்த படங்கள் குறைவு தவிர எண்டர்டெயின்மெண்டுக்குப் பஞ்சம் இருக்காது. 

*இருப்பினும் கடைசியில் பொம்ப்ளே பொம்ப்ளேயா இருக்கணும் என்று ராஜேஷும்-சிவாவும் முடித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புவோம்!

மிஸ்டர் லோக்கல்

ஹிப்-ஹாப் தமிழா

2k கிட்ஸ்ஸின் அபிமான ஹீரோ, இசையமைப்பாளராகிவிட்டார் ஹிப்ஹாப் தமிழா. பாடல்களும் ஏற்கனெவே ஃப்-எம்களில் ரிபீட் மோட் போடத்துவங்கிவிட்டார்கள். சிவகார்த்திகேயன், நயன் தாரானா, ராஜேஷ் ரசிகர்களைவிட இவருக்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கும் போல... இப்படி எல்லாம் பக்காவாக இருக்கிறது இந்தப்படத்தில். நாளை வெளியாகும் இந்தப்படம் மேலே கூறியிருக்கும் விஷயங்களால் ஹிட் அடிக்குமா என ரிலீஸுக்கும் பிறகு பார்ப்போம்!

NEXT STORY
Mr local Preview: மிஸ்டர் லோக்கலைப் பார்க்க இந்த 5 காரணங்கள் போதும்! Description: படம் நாளை வெளியாகவிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்பதற்கான ஐந்து விஷங்கள் இங்கே...!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles